/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை திட்டம்: கலெக்டர் ஆய்வு
/
ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை திட்டம்: கலெக்டர் ஆய்வு
ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை திட்டம்: கலெக்டர் ஆய்வு
ராமேஸ்வரத்தில் சுற்றுச்சாலை திட்டம்: கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 04, 2011 11:01 PM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் தெற்குரத வீதி கடற்கரையோரத்தில் சுற்றுச்சாலை
அமைப்பது குறித்து கலெக்டர் அருண்ராய் ஆய்வு செய்தார்.
கோயில் இணை கமிஷனர்
ராஜமாணிக்கம், உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், தாசில்தார் கதிரேசன்,
டி.எஸ்.பி.,மணிவண்ணன், நகராட்சி கமிஷனர் முஜூபுர்ரகுமான், இன்ஜினியர்
ரெத்தினவேலு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.செப்.15 முதல் கார்
பார்க்கிங் பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த தேவையான
நடவடிக்கைகளை எடுக்க கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். பின்னர் அவர்
கூறியதாவது: நான்குரத வீதியில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை
எடுக்கப்படும். தெற்குரத வீதியில் கடற்கரையோரசாலை அமைப்பதற்குள்ள
வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்படும், என்றார்.