sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மன்னார் வளைகுடா சுற்றுசூழல், மீன்வளம், பாதுகாப்பு குறித்து இலங்கையில் நவம்பரில் ஆலோசனை கூட்டம்

/

மன்னார் வளைகுடா சுற்றுசூழல், மீன்வளம், பாதுகாப்பு குறித்து இலங்கையில் நவம்பரில் ஆலோசனை கூட்டம்

மன்னார் வளைகுடா சுற்றுசூழல், மீன்வளம், பாதுகாப்பு குறித்து இலங்கையில் நவம்பரில் ஆலோசனை கூட்டம்

மன்னார் வளைகுடா சுற்றுசூழல், மீன்வளம், பாதுகாப்பு குறித்து இலங்கையில் நவம்பரில் ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 06, 2011 11:52 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், மன்னார் வளைகுடா கடல் சுற்றுச்சூழல் முறை மற்றும் கடல் வளங்கள் குறித்த இந்திய-இலங்கை நாடுகளின் பிரதிநிதிகள் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நவம்பரில் இலங்கையில் நடைபெற உள்ளது.

ராமேஸ்வரத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தில் மத்திய அரசின் கடல் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் ஜே.ஆர்.பட், இந்திய சர்வே துறை மேலாண்மை இயக்குனர் விஜயகுமார், மீன்வளத்துறை கமிஷனர் விக்னேஷ் பட் உட்பட கடல் சார்ந்த துறை அதிகாரிகள், இலங்கை மீன்வளத் தொழில்நுட்பட மேலாண்மை இயக்குனர் இந்திரா ரணசிங்கே, ஐ.யு.சி.என். அமைப்பு இயக்குனர் சமன் பி விதான்கே மற்றும் இலங்கை அதிகாரிகள் 52 பேர் கலந்து கொண்டனர். நான்கு குழுவாக பிரிந்து கடல்வளம், சுற்றுச்சூழல் சம்பந்தமாக ஆய்வு செய்த இவர்கள், நேற்று காலை தனுஷ்கோடி தென்கடல் மற்றும் பாம்பன் கடலில் அமைந்துள்ள குருசடை தீவு உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வங்காள விரிகுடா உள்கட்டமைப்பின் தலைவர் யுவராஜ்சிங் யாதவ் கூறியதாவது: இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சுற்றுச்சூழல், மீன்வளம், கடல் வளத்தை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பது குறித்தும், மீனவர்கள் மீன்பிடி முறைகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்தும் இரண்டு நாள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. நவம்பரில் இலங்கையில் நடத்தப்படும் கூட்டத்தில் இந்திய-இலங்கை பிரதிநிதிகள் கலந்து கொண்டு வங்காள விரிகுடா மற்றும், பாக்ஜலசந்தி கடல் சூழல் குறித்து ஆய்வு செய்து கருத்துக்களை தெரிவிப்பார்கள். தொடர்ந்து மூன்றாவதாக நடத்தப்படும் கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் ஆராயப்பட்டு இரண்டு அரசுகளுக்கும் அறிக்கை வழங்கப்படும். இருநாடுகளும் கூட்டாக இக்கடல் பகுதியில் சுற்றுச்சூழல், மீன்வளத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தும். இதனால் இந்திய-இலங்கை இருநாடுகளை சேர்ந்த மக்களுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் நலன் பயக்கும், என்றார்.








      Dinamalar
      Follow us