/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு ஆயுள்
/
மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு ஆயுள்
ADDED : செப் 07, 2011 10:53 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மனைவியை தீ வைத்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நம்புதாளையை சேர்ந்தவர் முகம்மது, 32. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நூரியா பானுவுக்கும் 2001ல் திருமணம் நடந்தது. மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. நூரியா பானுவை, முகம்மது கொடுமைபடுத்தினார். இதனால் நூரியா பானு, தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 19.6.2009ல் முகமது, தனது மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வந்தார். கூடுதல் வரதட்சணை கேட்டார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நூரியா பானுவை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்றார். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் நடந்தது. முகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட விரைவு கோர்ட் நீதிபதி சிவசுப்பிரமணியன் தீர்ப்பளித்தார்.