sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் மாவட்டத்தில் சகஜ நிலை திரும்பினாலும் பதட்டம் அகலாத பரமக்குடி

/

ராமநாதபுரம் மாவட்டத்தில் சகஜ நிலை திரும்பினாலும் பதட்டம் அகலாத பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சகஜ நிலை திரும்பினாலும் பதட்டம் அகலாத பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சகஜ நிலை திரும்பினாலும் பதட்டம் அகலாத பரமக்குடி


ADDED : செப் 13, 2011 10:20 PM

Google News

ADDED : செப் 13, 2011 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நீடித்த பதட்டம் நேற்று தணிந்தது.

மாவட்டத்தில் சகஜ நிலை திரும்பினாலும், கடை அடைப்பு, மக்கள் நடமாட்டம் இல்லாமல் பரமக்குடி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் அகலாமல் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்., 11ல், இமானுவேல் சேகரன் நினைவு தின த்தில் ஏற்பட்ட கலவரத்தால் மாவட்டத்தில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த இரண்டு தினங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை முதல் ராமநாதபுரம், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ராமநாதபுரத்தில் அரசு பள்ளிகள் செயல்பட்டாலும் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.ராமநாதபுரம் அருகே லாந்தை மற்றும் பார்த்திபனூர் சோமாந்தூர் விலக்கு அருகே மர்ம கும்பலின் கல்வீச்சில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. பட்டணம்காத்தான் அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் வெளிமாநில சுற்றலா பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் மூன்று பயணிகள் காயமடைந்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.பதட்டம் அகலாத பரமக்குடி: நேற்று காலை முதல் பரமக்குடி இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. காலை முதல் ஒவ்வொரு பகுதியாக பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம்-விருதுநகர் அரசு பஸ் சத்திரக்குடி அருகே வணங்கானேந்தல் கிராமம் வழியாக வந்த போது ஒரு கும்பல் கல் வீசியது. பஸ் கண்ணாடி உடைந்தது. பஸ்சில் சென்ற கீழக்கரை புல்லந்திரியைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தின் தலையில் காயம் ஏற்பட்டது. பார்த்திபனூர் சோமாத்தூர் விலக்கு ரோட்டில் வந்த மதுரை-ராமநாதபுரம் பஸ் மீது ஒரு கும்பல் கல்வீசி கண்ணாடி உடைந்தது. கடைகள் அடைப்பு: பரமக்குடி ஐந்து முனை சந்திப்பு, முதுகுளத்தூர் ரோடு, மதுரை-மண்டபம் ரோடு, இளையான்குடி ரோட்டில் உள்ள கடைகள் நேற்றும் திறக்கப்படவில்லை. அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பரமக்குடி பெரியகடைத் தெரு, காந்திசிலை, ஆற்றுப்பாலம் பகுதிகளில் காலை முதல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. கிராமங்களுக்கு குறைந்தளவே பஸ்கள் இயக்கப்பட்டன. கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதாக புரளி கிளம்பியதை பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பதட்டம் அகலவில்லை.பரமக்குடியில் அரசு பள்ளிகள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. குறைந்தளவே மாணவர்கள் வந்திருந்தனர். இவர்களும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.ஏ.டி.ஜி.பி., பார்வை: பரமக்குடியில் கலவரப் பகுதிகள் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் பார்வையிட்டார். பின்னர் சம்பவம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அரைமணிநேரம் இருந்த அவர் பின்னர் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us