/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு வீடுகளை சூழ்ந்தது தண்ணீர்
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு வீடுகளை சூழ்ந்தது தண்ணீர்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு வீடுகளை சூழ்ந்தது தண்ணீர்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு வீடுகளை சூழ்ந்தது தண்ணீர்
ADDED : செப் 16, 2011 11:15 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்-ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம மக்களின் தாகத்தை போக்க, காவிரி குடிநீர் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 616 கோடி ரூபாயில் அமல்படுத்தபட்டது.
இதுவரை காவிரி குடிநீரை பார்க்காத கிராமங்களும் உண்டு. அந்தளவிற்கு காவிரி குடிநீர் திட்டத்தில் குளறுபடிகள் உள்ளன. இதை உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.இதனால், முதுகுளத்தூர்- ராமநாதபுரம் செல்லும் வழியில் கந்தசாமிபுரம் அருகே ரோட்டோரம் அமைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் முறையிட்டும் சீரமைக்கபடவில்லை. இதனால் வீணாகும் குடிநீர் அருகிலுள்ள வீடுகளை வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில், ''குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் குடிநீரை 5 ரூபாய்க்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.