/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவி
/
தேசிய ஹாக்கி போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவி
ADDED : நவ 09, 2024 11:07 PM

உத்தரகோசமங்கை:இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கான தமிழக அணி தேர்வு போட்டிகள் புதுக்கோட்டையில் நடந்தது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சக்தி விஜயசாந்தி 16, தமிழக ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். நவ.22 முதல் 27 வரை ஹரியானா மாநிலம் ரோட்டாக் நகரில் நடக்கும் தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளார்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியை தலைமை ஆசிரியர் ராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ஹாக்கி பயிற்றுனர் மணி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.