/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தை அரசு போக்குவரத்து மண்டலமாக அறிவிக்க வேண்டும்
/
ராமநாதபுரத்தை அரசு போக்குவரத்து மண்டலமாக அறிவிக்க வேண்டும்
ராமநாதபுரத்தை அரசு போக்குவரத்து மண்டலமாக அறிவிக்க வேண்டும்
ராமநாதபுரத்தை அரசு போக்குவரத்து மண்டலமாக அறிவிக்க வேண்டும்
ADDED : ஜன 02, 2025 04:45 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக கிளைகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இணைந்து காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக மண்டலமாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்துார், பரமக்குடி, ராமநாதபுரம் நகர், புறநகர் கிளை என 6 கிளைகள் உள்ளன. புதியதாக தொண்டி, சாயல்குடியில் கிளைகள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கிளைகள் செயல்பட அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் 8 கிளைகளில் 450 க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கரூர், திருவள்ளூர் பகுதிகளில் 4 கிளைகள் இருக்கும் நிலையில் தனி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை புதிய மண்டலமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.