/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் ராமநாதபுரத்தை சேர்க்க வேண்டும்: விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ADDED : ஆக 25, 2025 11:48 PM

ராமாநதாபுரம்:
''தமிழ்நாடு வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை இணைக்க வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் அர்ஜுனன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ைஹட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மார்ச் 11ல் மாநில அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஐந்து மாதங்களாக இதை ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் இலாகா அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அனுமதி கொடுத்தது தெரியாது எனக்கூறினால் எப்படி நம்புவது.
இது விவசாயிகளை ஏமாற்றும் வேலை. தற்போது விவசாயிகள் எதிர்ப்பால் இத்திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டினால் அதிக ரசாயனம், நச்சுத்தன்மை கிணற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசடைந்து விடும். நிலத்தடி நீர் கெட்டு விடும். தொற்று நோய் பரவி ராமநாதபுரம் பாலைவனமாகி விடும்.
எனவே நிரந்தர தீர்வாக காவிரி டெல்டா பகுதியைப்போன்று தமிழ்நாடு வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் 3.5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நடக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை இணைக்க வேண்டும். அதற்கு சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.