/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி கூடத்திற்கு ராமநாதபுரம் மாணவி தேர்வு

ADDED : மே 16, 2025 03:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எம்.ஜி. பப்ளிக் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி யு.லத்திகா ஸ்ரீ மத்திய, மாநில அரசுகள் நடத்தும் விளையாட்டுப் பயிற்சிக் கூடத்திற்கு தேர்வாகியுள்ளார்.
ராமநாதபுரம் எம். ஜி.பப்ளிக் பள்ளியில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவி யு.லத்திகாஸ்ரீ 14. இவர் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டுப் பயிற்சிக் கூடத்தில் 14 வயதிற்குள்ளான பெண்கள் பிரிவு கூடைப்பந்து போட்டியில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பயிற்சித் தேர்வில் பங்கேற்றார்.
இதில் வெற்றி பெற்ற லத்திகாஸ்ரீ தற்போது மயிலாடுதுறையில் உள்ள உண்டு உறைவிட விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான பயிற்சிக்கூடத்திற்கு தேர்வாகியுள்ளார். மேலும் இவர் மாநில அரசு பயிற்சிக் கூடத்திற்கும் தேர்வாகி ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவியை பள்ளி நிர்வாகிகள் டாக்டர்கள் சுப்ரமணியம், பிரேமலெட்சுமி, தாளாளர் டாக்டர் ஹர்ஷவர்தன், முதல்வர் விஜயலெட்சுமி, உடற்கல்வி இயக்குநர் ஜெகதீஷ் குமார், தாய் சோணு, ஆசிரியர்கள் பாராட்டியுனர்.