/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில அறிவியல் மாநாட்டில் ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
/
மாநில அறிவியல் மாநாட்டில் ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
மாநில அறிவியல் மாநாட்டில் ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
மாநில அறிவியல் மாநாட்டில் ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
ADDED : பிப் 19, 2025 04:49 AM

ராமநாதபுரம், : மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ராமநாதபுரம் பள்ளி மாணவர்களின் இரு ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ், பரிசு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகிறது.
மண்டல அளவிலான மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 4 பள்ளிகளின் ஆய்வுக் கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.
இவர்கள் புதுக்கோட்டையில் பிப்.,15, 16ல் நடந்த மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்றனர். இதில் இரு பள்ளி மாணவர்களின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஜூனியர் ஆங்கிலம் பிரிவில் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் கவினேஷ், பவ்சூர் ரகுமான், வழிகாட்டி ஆசிரியர் ஜேம்ஸ் கொலம்பஸ் ஆகியோர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தல் மற்றும் கடல் மாசு பிரச்னைக்கான தீர்வு என்றதலைப்பில் ஆய்வு செய்திருந்தனர்.
சீனியர் ஆங்கிலம் பிரிவில் ராமநாதபுரம் நபிஷா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விகாஷ், முனீஸ் குமார், வழிகாட்டி ஆசிரியர் கோகுல் சதீஷ்குமார் ஆகியோர் தெருக்களில் தேங்கும் மழை நீரை பயன்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் என்ற தலைப்பில் ஆய்வு செய்திருந்தனர்.
இந்த இரு ஆய்வு கட்டுரைகள் தேர்வானது. சாதித்த மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுத் தலைவர் இங்கர்சால் சான்றிதழ், கேடயம், பதக்கம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.
பள்ளி மாணவர்கள், வழிகாட்டிய ஆசிரியர்களையும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் தலைவர் லியோன், செயலாளர் காந்தி, பொருளாளர் பாலமுருகன், கல்வி ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், வட்டார நிர்வாகிகள் பாராட்டினர்.