/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டெல்டா தரவரிசையில் தேசிய அளவில் ராமநாதபுரம் முதலிடம்
/
டெல்டா தரவரிசையில் தேசிய அளவில் ராமநாதபுரம் முதலிடம்
டெல்டா தரவரிசையில் தேசிய அளவில் ராமநாதபுரம் முதலிடம்
டெல்டா தரவரிசையில் தேசிய அளவில் ராமநாதபுரம் முதலிடம்
ADDED : டிச 06, 2025 02:09 AM
ராமநாதபுரம்: முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தில் நாடு முழுவதும் பின்தங்கிய 112 மாவட்டங்களில் டெல்டா தரவரிசை பட்டியலில்தேசிய அளவில் ராமநாதபுரம் முதலிடம் பெற்றுள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியிருப்பதாவது:
முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசின் நிதி ஆயோக்கின் மூலம் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் 6 திட்டங்களின் அடிப்படையில் துறைவாரியான அளவீடுகளை 'சாம்பியன் ஆப் சேஞ்ச்' என்ற இணையதளத்தில் பதிவு செய்கின்றனர். காலாண்டிற்கு ஒரு முறை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு அதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களைத் தேர்வு செய்து JICA (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்) நிதியின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தில் 6 திட்டங்களில் நடப்பு 2025 ஏப்., முதல் ஜூன் வரை காலாண்டில் வேளாண்மை மற்றும் நீர் வளத்துறையில் முதல் இடத்தையும், இதர 5 துறைகளில் சிறந்த முன்னேற்றம் அடைந்ததன் அடிப்படையில் 112 மாவட்டங்களின் டெல்டா தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

