/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அபுதாபியில் மாயமான ராமநாதபுரம் தொழிலாளி
/
அபுதாபியில் மாயமான ராமநாதபுரம் தொழிலாளி
ADDED : டிச 03, 2024 05:33 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பம்மனேந்தல் சைவத்துரை அபுதாபியில் பணிபுரிந்த போது காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தர அரசு உதவ வேண்டும்என பெற்றோர் வலியுறுத்தினர்.
கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சைவத்துரை 34. இவர் 2 ஆண்டுகளாக அபுதாபியில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் 2024 ஜன., முதல் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுதொடர்பாக முத்துராமலிங்கம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மகனை கண்டுபிடித்து தரக்கோரி மனு அளித்தார். அதில், அபுதாபி நாட்டில்பணிபுரிபவர்களிடம் விசாரித்த போதும் சைவத்துரை எங்கே சென்றார் எனத்தெரியவில்லை.
எனது மகனை கண்டுபிடித்துதர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.