பரமக்குடி பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார திருநாள்
பரமக்குடி பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார திருநாள்
ADDED : ஏப் 22, 2026 06:00 PM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் நடந்தது.
ராமானுஜரின் 1009 வது அவதார திருநாள் நேற்று பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கொண்டாடப்பட்டது. இங்கு ஆழ்வார்கள் சன்னதியில் ராமானுஜர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபெரும்புதுாரில் கி.பி., 1017 ல் அவதரித்த ராமானுஜர் 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை திருக்கோஷ்டியூரில் உலகறியச் செய்தார்.
சித்திரை மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நேற்று காலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது.அப்போது உற்சவர் திருமேனி அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வீதிவலம் சென்றனர்.
*இதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
---
