ADDED : ஆக 21, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் ரம்புட்டான் பழங்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்து ராமநாதபுரம் சந்தையில் கிலோ ரூ.240 வரை விற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே சாகுபடி நடக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான பழங்கள் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களிலிருந்து வாங்கி வந்து சந்தையில் வியா பாரிகள் விற்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கிலோ ரூ.150க்கு விற்ற ரம் புட்டான் பழங்கள் வரத்து குறைவால் கிலோ ரூ.240 வரை விற்கப் படுகிறது.
சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்பதால் மக்கள் விரும்பி வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.

