ADDED : ஜன 09, 2026 06:11 AM
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.,11ல் அஷ்டமி பூப்பிரதட்சனத்தையொட்டி கோயில் நடை அடைக்கப்படுகிறது.
ஜன., 11ல் அஷ்டமி பூப்பிரதட்சனத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா சென்று ஜீவராசிகளுக்கு படியளத்தல் நிகழ்ச்சி நடக்கும்.
இதனையொட்டி அன்று அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3:30 முதல் 4:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும்.
தொடர்ந்து காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகியதும் காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை கோயில் நடைஅடைக்கப்படும். பின் சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் உச்சிகால பூஜை நடக்கும்.
இதன் பின் மதியம் 3:30 மணிக்கு கோயில் நடை திறந்ததும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் இணை ஆணையர் செல்லதுரை தெரிவித்தார்.
