/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோவிலுக்குள் தேங்கிய மழைநீரால் அவதி
/
ராமேஸ்வரம் கோவிலுக்குள் தேங்கிய மழைநீரால் அவதி
ADDED : ஜன 20, 2025 08:21 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் ராமநாதசுவாமி கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் மற்றும் நகராட்சி அலுவலகம் முன்பு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. இதனால் டூவீலர்கள், ஆட்டோக்களில் தனுஷ்கோடி சென்ற பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
மேலும் ராமநாதசுவாமி கோவில் மேல் தளத்தில் இருந்து மழைநீர் 2, 3ம் பிரகாரத்தில் குளம்போல் தேங்கியது. பக்தர்கள் சிரமத்துடன் பிரகாரத்தில் நடந்து சென்று தரிசனம் செய்தனர். கோயில் ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றி சுத்தம் செய்தனர். தொடர் மழையால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கியதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.