/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் டூ பாம்பன் வரை புதிய தண்டவாளம் அமையுது
/
ராமேஸ்வரம் டூ பாம்பன் வரை புதிய தண்டவாளம் அமையுது
ADDED : பிப் 08, 2025 01:42 AM
ராமேஸ்வரம்:இன்று (பிப்., 8) முதல் ராமேஸ்வரம் - பாம்பன் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே புதிய தண்டவாளங்கள் பொருத்தும் பணி துவங்குகிறது.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப்பணிகள் முடிந்த நிலையில் விரைவில் திறப்பு விழா நடக்க உள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன் ரயில்வே ஸ்டேஷன்களில் பராமரிப்பு பணி முழு வீச்சில் நடக்கிறது.
இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம்- பாம்பன் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே 10 கி. மீ.,க்கு உள்ள பழைய தாண்டவளங்களை அகற்றி விட்டு புதிய தண்டவாளங்கள் பொருத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் இப்பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். ஒரு தண்டவாளம்240 மீட்டர் நீளம் உள்ளது.
இந்த வகை தண்டவாளத்தை 100 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயில் பாதையில் பொருத்துவது வழக்கம். இப்பணி 4 நாட்களில் முடிந்து விடும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.