/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் - பரமக்குடி -- மதுரை மார்க்கத்தில் அலைமோதும் கூட்டம்
/
ராமேஸ்வரம் - பரமக்குடி -- மதுரை மார்க்கத்தில் அலைமோதும் கூட்டம்
ராமேஸ்வரம் - பரமக்குடி -- மதுரை மார்க்கத்தில் அலைமோதும் கூட்டம்
ராமேஸ்வரம் - பரமக்குடி -- மதுரை மார்க்கத்தில் அலைமோதும் கூட்டம்
ADDED : பிப் 21, 2024 05:20 AM

பரமக்குடி : -பரமக்குடியில் இருந்து மதுரை மற்றும் ராமேஸ்வரம் மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் குறைந்த அளவே உள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாவதால் கூடுதல் பஸ்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மட்டுமே ராமேஸ்வரம் தீவை உள்ளடக்கிய மாவட்டமாக உள்ளது. ராமாயண காலத்துடன் தொடர்புடைய இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகின்றனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு வழிபாட்டு தலங்கள் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
அதே நேரம் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைந்த அளவில் தான் உள்ளது. நான்கு வழி சாலை அமைப்பதற்கு முன்பு ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை மார்க்கத்தில் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்போது அதிகப்படியான பஸ்கள் ஒன் டூ ஒன் என்ற வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேரடியாக மதுரைக்கு செல்கின்றன. இதனால் நுாற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய பரமக்குடியில் பஸ் போக்குவரத்திற்கு ஆண்டு முழுவதும் மக்கள் திண்டாடும் நிலை உள்ளது.
தினமும் காலை, மாலை நேரங்கள் உட்பட விசேஷ நாட்களில் குடும்பமாக செல்லும் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் உள்ளது.
கடந்த மாதங்களில் நள்ளிரவில் நுாற்றுக்கணக்கான பயணிகள் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் மறியல் செய்தனர்.
மேலும் ஒவ்வொரு நகருக்குள்ளும் பஸ்கள் செல்லும் சூழலில் கட்டணம் குறைந்த அளவில் உள்ளது. இதே நிலையில் ஒன் டூ ஒன் பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பரமக்குடி பஸ் ஸ்டாண்டுக்கு அதிகப்படியான பஸ்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டும்.

