/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் - துாத்துக்குடி ரயில் போக்குவரத்து துவக்க ....பயணிகள் எதிர்பார்ப்பு
/
ராமேஸ்வரம் - துாத்துக்குடி ரயில் போக்குவரத்து துவக்க ....பயணிகள் எதிர்பார்ப்பு
ராமேஸ்வரம் - துாத்துக்குடி ரயில் போக்குவரத்து துவக்க ....பயணிகள் எதிர்பார்ப்பு
ராமேஸ்வரம் - துாத்துக்குடி ரயில் போக்குவரத்து துவக்க ....பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 10, 2025 11:36 PM

ராமேஸ்வரம்வரும் ரயில்கள் பரமக்குடி, ராமநாதபுரம் வழியாகசெல்கின்றன. பின்பு அதே ராமநாதபுரம், பரமக்குடி வழியாகசிவகங்கை மாவட்டம் மானாமதுரை சென்று பின்னர் அங்கிருந்துவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடி,திருச்செந்துார், திருநேல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்குரயில் சேவை உள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து துாத்துக்குடி செல்வதற்குராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக குறுக்குச்சாலையில்துாத்துக்குடி செல்வதே நேர்வழி மட்டுமின்றி குறைந்த துாரம் கொண்டது.ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக துாத்துக்குடிசெல்வதற்கு 122 கி.மீ துாரம் தான்.
அதுவே ராமநாதபுரம்,பரமக்குடி, அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு 220 கி.மீ செல்ல வேண்டும். பரமக்குடி, மானாமதுரை, அருப்புகோட்டை வழியாகசெல்லும் போது பயணிகளுக்கு 102 கி.மீ கூடுதல் தொலைவும்,கூடுதல் நேரம், பணமும் விரயமாகிறது. இதனால்வியாபாரிகள்,சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து துாத்துக்குடி வழியாக காரைக்குடி வரை சுமார் 462 கி.மீ., அதாவதுகிழக்கு கடற்கரை வழியாக ராமநாதபுரம், தேவிபட்டினம், தொண்டி, மிமீசல், பட்டுக்கோட்டை, நாகபட்டினம், வேளாங்கண்ணி வரை ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு நிதிஒதுக்கீடு செய்து வழித்தடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பின் அத்திட்டம் கிடப்பில் உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த பலமுறை ரயில்வே நிர்வாகம், மத்தியஅரசுக்கு வியாபாரிகள், பயணிகள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி வழியாக துாத்துக்குடிக்கு ரயில் சேவைதுவங்கினால் திருப்புல்லாணி, ஏர்வாடி தர்ஹா உள்ளிட்டசுற்றுலாத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளும் பயன் பெறுவார்கள்.
எனவே நடப்பு ஆண்டிலாவது ராமநாதபுரம்- சாயல்குடி வழியாகதுாத்துக்குடிக்கு ரயில் சேவை துவங்க மத்திய அரசு மற்றும் தெற்கு ரயில்வேநிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் வலியுறுத்தினர்.

