/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் காணிக்கை தேடல்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் காணிக்கை தேடல்
ADDED : ஜன 30, 2024 12:08 AM

ராமேஸ்வரம், -ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் வீசிய காணிக்கையை மீனவ தொழிலாளர்கள் தேடி சேகரித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள். பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடும் போது நாணயம், ரூபாய் மற்றும் நாகதோஷம் நீங்க தங்கம், வெள்ளியில் சிறிய அளவில் தகடு போல் செய்து, பூஜை செய்து போடுவார்கள்.
மேலும் செல்வந்தர்கள், வியாபாரிகள் தங்கம், வெள்ளி நாணயங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்த காணிக்கையை அலையின் வேகம் குறைந்ததும், மீனவ தொழிலாளர்கள் சிலர் முகத்தில் கடல்நீர் புகாத வகையில் கண்ணாடி அணிந்து, சல்லடை மூலம் பல மணி நேரம் தேடுவார்கள்.
இதில் பெரும்பாலும் நாணயங்கள் மட்டுமே சிக்கும். சில சமயம் கிடைக்கும் வெள்ளி (10 கிராம் வரை), தங்கம் (500 மி.கி., முதல் ஒரு கிராம் வரை) தகடுகளும் கிடைக்கும்.