/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் புறவழிச்சாலை நிலம் எடுப்பு ஜூலை 9ல் ஆவணங்கள் சரிபார்ப்பு
/
ராமேஸ்வரம் புறவழிச்சாலை நிலம் எடுப்பு ஜூலை 9ல் ஆவணங்கள் சரிபார்ப்பு
ராமேஸ்வரம் புறவழிச்சாலை நிலம் எடுப்பு ஜூலை 9ல் ஆவணங்கள் சரிபார்ப்பு
ராமேஸ்வரம் புறவழிச்சாலை நிலம் எடுப்பு ஜூலை 9ல் ஆவணங்கள் சரிபார்ப்பு
ADDED : ஜூலை 02, 2025 10:15 PM
ராமநாதபுரம்:ராமேஸ்வரம் புறவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு ஜூலை9ல் நடக்க உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் சுற்றுலா வாகனங்கள்வருவதால் சீதா தீர்த்த குளம் முதல் கோயில்மேற்கு வாசல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள்ஊர்ந்தபடி செல்கின்றன.
இதன் காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு உரிய நேரத்திலும், உள்ளூர்மக்கள் பிற இடங்களுக்கு விரைவாக செல்ல முடியாமலும்சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேய்கரும்புஅப்துல் கலாம் தேசிய நினைவகம் துவங்கி ராமர்பாதம் வழியாகஅக்னிதீர்த்தம் செல்லும் வகையில் 6.3 கி.மீ.,ல் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு நிலங்களைகையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறியது: நிலங்களைகையகப்படுத்தும் பணிக்கு ரூ.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார். துாத்துக்குடி மாவட்டசிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில்ஜூலை 9ல் நில உரிமையாளர்களிடம்ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
நிலம்கையகப்படுத்திய பின் பணிகள் துவங்கப்படும். ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்றனர்.