ADDED : செப் 24, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: சர்வதேச கடலோர துாய்மை தினத்தையொட்டி ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் வேல் இந்தியா பவுண்டேசன் சார்பில் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
சர்வதேச கடலோர துாய்மை தினத்தையொட்டி ராமநாதபுரம் வேல் இந்தியா பவுண்டேசன் சார்பில் ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் கிடந்த பாலித்தீன் பை, பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
வேல் இந்தியா பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் மணிகண்டன் தலைமை வகித்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமூக ஆர்வலர்கள் மங்களநாத சேதுபதி, ஜெயகாந்தன், சிறுவர் மன்ற பொறுப்பு ஆசிரியர் லட்சுமணன், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

