/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஹ்ரைன் கடலில் விழுந்து ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு
/
பஹ்ரைன் கடலில் விழுந்து ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு
பஹ்ரைன் கடலில் விழுந்து ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு
பஹ்ரைன் கடலில் விழுந்து ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு
ADDED : ஏப் 22, 2025 07:27 AM

ராமேஸ்வரம் : பாம்பன் பகுதி மீனவர் சீமோன்சன், 33, என்பவர், பஹ்ரைன் நாட்டில், கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை எடுத்து வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாம்பனைச் சேர்ந்த மீனவர் சூசைமரியான் மகன் சீமோன்சன், 33. இவர் மீன்பிடி கூலித்தொழிலாளி. வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன் சென்றார்.
பஹ்ரைன் கடலில் மீன்பிடித்து, கடந்த 20ல் கரை திரும்பி கொண்டிருந்த போது படகில் இருந்த சீமோன்சன், தவறி கடலில் விழுந்து பலியானார். இத்தகவலை சக மீனவர்கள் நேற்று முன்தினம் காலை சீமோன்சன் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இதை கேட்டு, உறவினர்கள் கதறி அழுதனர். சீமோன்சனுக்கு மனைவி செல்சியா, இரு மகன்கள் உள்ளனர். தற்போது செல்சியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
சீமோன்சன் உடலை பாம்பன் எடுத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம், சூசைமரியான் மனு அளித்தார்.