ADDED : அக் 24, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம், :நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரையும், இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 420 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்துக் கொண்டு தப்பினர். இதில் ராமபாண்டி, மகேந்திரன் ஆகியோரது படகில் இருந்த 16 மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இரு படகையும் மடக்கிப் பிடித்தனர்.
பின் படகுகளுடன் மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.