/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
/
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை
ADDED : ஜூன் 16, 2025 05:28 AM

ராமேஸ்வரம்: பலத்த சூறாவளி வீசுவதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை முடிந்த நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் படகுகளில் பழுதுகளை நீக்கி 1200 படகுகள் வரை எரிபொருளை நிரப்பி, புதிய வலைகள் வடிவமைத்து இன்று (ஜூன் 16) மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்தனர்.
ஆனால் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசும்; மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகின்றன.
மீன்பிடிக்க சென்றால் மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படும் என்பதால் இப்பகுதி மீனவர்கள் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். 61 நாட்கள் தடை முடிந்தும், இயற்கை விதித்த தடையால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.