/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் மோடி வருகையால் பாதுகாப்பு கருதி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

ADDED : ஏப் 04, 2025 03:00 AM

ராமேஸ்வரம்:பிரதமர் மோடி வருகையால் பாதுகாப்பு கருதி இன்று(ஏப்.4) முதல் ஏப்.,6 வரை ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
ஏப்.,6ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனால் பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடல் வழியாக அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி இன்று முதல் ஏப்., 6 வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
* தடுப்பு வேலிகள்
பிரதமர் மோடி மண்டபத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கி ராமேஸ்வரம் வர உள்ளார். ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை 19 கி.மீ.,ல் மக்கள் கூடும் இடங்களில் 10 கி.மீ., க்கு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரத்தடி, இரும்பிலான தடுப்பு வேலிகள் அமைக்கின்றனர்.
*எஸ்.பி.ஜி., ஆய்வு
பிரதமரின் சிறப்பு பாதுகாப்புபடை ஐ.ஜி., நவீத்குமார் நட்டா, அதிகாரிகள் நேற்று மண்டபத்தில் ஹெலிகாப்டர் தளத்தையும், பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம், ராமேஸ்வரத்தில் விழா நிகழ்ச்சி நடக்கும் இடத்தையும் ஆய்வு செய்தனர். பின் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.