/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக.15ல் உண்ணாவிரதம்: இன்று முதல் ஸ்டிரைக்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக.15ல் உண்ணாவிரதம்: இன்று முதல் ஸ்டிரைக்
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக.15ல் உண்ணாவிரதம்: இன்று முதல் ஸ்டிரைக்
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக.15ல் உண்ணாவிரதம்: இன்று முதல் ஸ்டிரைக்
ADDED : ஆக 11, 2025 02:44 AM
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி ஆக.,15ல் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதமும், ஆக.,19ல் ரயில் மறியலும் நடத்த உள்ளனர். இன்று முதல் காலவரைற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் தலைவர் சேசுராஜா தலைமையில் நடந்தது. இதில் , இலங்கை சிறையில் தண்டனை கைதிகளாக உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் உணவு, குடிநீர் இன்றி சித்திரவதைக்கு ஆளாகி மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களையும், மீன்பிடி தடை காலத்திற்கு பின் இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ஆக., 13ல் ஆர்ப்பாட்டமும், ஆக., 15ல் உண்ணாவிரதமும், ஆக., 19ல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இக்கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சகாயம், எமரிட், தட்சிணாமூர்த்தி பங்கேற்றனர். அதன்பிறகு ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் சங்கத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தீர்மானம் குறித்த மனு அளித்தனர்.