/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு
ADDED : ஆக 20, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்ரத்தில் இருந்து ஜூன் 30ல் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
வாய்தா நாளான நேற்று அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
விசாரித்த நீதிபதி, மீனவர்களின் சிறைக்காவலை செப்., 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார். தொடர்ந்து 51 நாட்கள் சிறையில் இருந்ததால் மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது அவர்களது குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.