/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் பள்ளியில் காலை உப்புமாவுக்கு நோ ரெஸ்பான்ஸ்
/
ராமேஸ்வரம் பள்ளியில் காலை உப்புமாவுக்கு நோ ரெஸ்பான்ஸ்
ராமேஸ்வரம் பள்ளியில் காலை உப்புமாவுக்கு நோ ரெஸ்பான்ஸ்
ராமேஸ்வரம் பள்ளியில் காலை உப்புமாவுக்கு நோ ரெஸ்பான்ஸ்
ADDED : செப் 20, 2024 07:09 AM

ராமேஸ்வரம், - ராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் வழங்கும் உப்புமா உணவை மாணவர்கள் விரும்பாததால் வீணாகுகிறது.
அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் உள்ள 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு வெண் பொங்கல், சேமியா உப்புமா, ரவை உப்புமா, கோதுமை உப்புமா ஆகிய உணவுகள் வழங்கப்படுகிறது.
இந்த உணவுகளை துவக்கத்தில் ருசித்து சாப்பிட்ட மாணவர்கள் காலப்போக்கில் ருசி பிடிக்காமல் உப்புமா வகை உணவுகளை 90 சதவீதம் மாணவர்கள் தவிர்த்து விட்டனர். வெண் பொங்கலை தவிர சேமியா, ரவை ஆகியவற்றை வறுத்தும், கோதுமையை நன்றாக கழுவி சமைப்பது இல்லை.
மேலும் உப்புமா உணவுக்கு தினமும் சாம்பார் வழங்குகின்றனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 90 சதவீதம் மாணவர்கள் உப்புமா வகை உணவை உண்பதில்லை. இதனால் உப்புமா உணவுகள் வீணாகுகிறது. எனவே உப்புமா உணவை நன்றாக சமைத்து அதற்கு தினமும் சாம்பார் வழங்காமல் சர்க்கரை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் ருசித்து சாப்பிட வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.