/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மாணவர் காயம் பள்ளி முதல்வர் மீது வழக்கு
/
ராமேஸ்வரம் மாணவர் காயம் பள்ளி முதல்வர் மீது வழக்கு
ராமேஸ்வரம் மாணவர் காயம் பள்ளி முதல்வர் மீது வழக்கு
ராமேஸ்வரம் மாணவர் காயம் பள்ளி முதல்வர் மீது வழக்கு
ADDED : அக் 28, 2024 01:38 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மாணவனை அடித்து காயப்படுத்திய பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிந்ததும், அவர் தலைமறைவானார். இதை கண்டித்து உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
தங்கச்சிமடம் சந்தியாநகரில் உள்ள கிரைட்ஸ் ஆப் தி கிங் மெட்ரிக் பள்ளியில் முதல்வராக ஷாலினி 40, உள்ளார்.
சில நாட்களுக்கு முன் முதல்வர் ஷாலினி குறித்து பள்ளி கழிப்பறையில் சில மாணவர்கள் விமர்சித்து எழுதியுள்ளனர். இதனால் முதல்வர் ஷாலினி 9ம் வகுப்பு படிக்கும் தங்கச்சிமடம் சேர்ந்த மீன் வியாபாரி பிராங்க்ளின் மகனை பிரம்பால் சரமாரியாக அடித்து காயப்படுத்தினார். மேலும் தகாத வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளார்.
இதையறிந்த பிராங்க்ளின் நேற்று முன்தினம் தங்கச்சிமடம் போலீசில் புகார் செய்து விட்டு உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டார். இதையடுத்து ஷாலினி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில் ஷாலினி தலைமறைவாகினார்.
முற்றுகை
முதல்வர் ஷாலினியை கைது செய்ய கோரி பிராங்க்ளின் உறவினர்கள் நேற்று தங்கச்சிமடம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
பின் அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.