தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்று ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

 இன்று ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

 இன்று ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு


ADDED : ஆக 20, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால் இன்று (ஆக.21) நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாத சுவாமி கோயிலில் 16 நாட்கள் ஆடித் திருவிழா நடந்தது. ஆக.16ல் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் 17ம் நாளான இன்று காலை 6:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வார்கள். மகா தீபாராதனை முடிந்த பின் இரவு 9:00 மணிக்கு கோயிலுக்கு திரும்புவர்.

இன்று அதிகாலை 2:30 முதல் 3:00 மணி வரை கோயிலில் ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜை, சாயரட்சை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து இன்று காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். எனவே பக்தர்கள் இன்று கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கோயில் இணை ஆணையர் சுரேஷ் கேட்டுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us