sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்

/

ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்

ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்

ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்


ADDED : பிப் 02, 2025 02:18 AM

Google News

ADDED : பிப் 02, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப தேரோட்டம் பிப்., 12 ல் நடக்க உள்ளது. அன்று கோயில் நடை அடைக்கப்படும்.

பிப்.,11ல் தைப்பூசத்தையொட்டி அன்றிரவு 7:00 மணிக்கு இக்கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயில் குளத்தில் பிள்ளையார் தெப்ப தேரோட்டம் நடக்கும். பிப்.,12ல் தைப்பூச தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5:00 முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதை தொடர்ந்து காலை, சாயரட்ச பூஜைகள் நடக்கும்.

அதன் பிறகு கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி மதியம் 1:30 மணிக்கு லட்சுமணேஸ்வரர் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கும். மாலை 5:00 மணிக்கு தெப்ப மண்டபத்தில் தீபாராதனை முடிந்து மாலை 6:00 முதல் இரவு 7:00 மணிக்குள் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் தைப்பூச தெப்பத்தில் எழுந்தருள்வார்கள்.

இரவு 7:30 மணிக்கு தீர்த்த குளத்தில் தைப்பூச தெப்பத் தேரோட்டம் வலம் வரும். பின் சுவாமி, அம்மன் வீதி உலா புறப்பாடாகி கோயிலுக்கு சென்றடைவர். பிப்.,12ல் காலை 10:00 மணிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடானதும் கோயில் நடை அடைக்கப்படும். அன்று முழுவதும் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us