/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரை-ராமேஸ்வரம் சாலையில் விபத்துகள் நான்கு வழிச்சாலை திட்டம் எப்போது முடியும்

ADDED : செப் 03, 2011 12:24 AM
ராமநாதபுரம் : மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை திட்டம், இழுத்துக் கொண்டே செல்வதால், விபத்துகள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் உள்ளன.
மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோடு அமைத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அவ்வப்போது 'பேட்ஜ் ஒர்க்' மட்டும் பார்க்கின்றனர். மதுரையிலிருந்து ராமநாதபுரம் வருவதற்குள், போதும், போதும் என்றாகி விடுகிறது.கடந்த ஆட்சியில் மதுரை முதல் தனுஷ்கோடி வரை நான்குவழிச்சாலை அமைக்கப்படும், என்று அறிவித்தனர். சர்வே பணிகளும் நடந்தது. ஆனால், ரோடு பணி கிடப்பில் போடப்பட்டது. இரு வழிச்சாலையின், அகலம் குறைந்து கொண்டே வருகிறது. வேகமாக வரும் வாகனங்கள், விபத்தில் சிக்குகின்றன. பரமக்குடி-ராமநாதபுரம் இடையே தினமும் மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன. இந்நிலையில் மதுரை-ராமேஸ்வரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தெய்வேந்திர நல்லூர் ஊராட்சி தலைவர் விஜயராகவன் கூறியதாவது: வாகனங்கள் ஒதுங்க வழியின்றி உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால் ரோட்டோரத்தில் செல்வோர் பீதியுடனே செல்கின்றனர். மதுரை-ராமநாதபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைவில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும், என்றார்.