/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனை அலுவலர்களுக்கு "ஆன்லைன்' குறித்து சிறப்பு பயிற்சி
/
அரசு மருத்துவமனை அலுவலர்களுக்கு "ஆன்லைன்' குறித்து சிறப்பு பயிற்சி
அரசு மருத்துவமனை அலுவலர்களுக்கு "ஆன்லைன்' குறித்து சிறப்பு பயிற்சி
அரசு மருத்துவமனை அலுவலர்களுக்கு "ஆன்லைன்' குறித்து சிறப்பு பயிற்சி
ADDED : ஆக 16, 2011 11:26 PM
ராமநாதபுரம் : நோயாளிகள் குறித்த அறிக்கையை ஆன் லைனில் பதிவு செய்வது
குறித்து அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு, நேரடியாக சிறப்பு பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இணைக்கும்
வகையில் ஆன் லைன் திட்டம் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது.
அரசு
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனி எண் அளித்து, சிகிச்சைகள் குறித்த முழு
தகவல் பதிவு செய்யப்படும்.நோயாளி வேறு ஊருக்கு சென்று அங்குள்ள அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட எண்ணை
தெரிவித்தால், முன்பு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விபரங்கள்
தெரியவரும். அதனடிப்படையில் மேல்சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டத்தில்
டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் பதிவு செய்யும்
முறை குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட
சுகாதாரதிட்ட ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி கூறியதாவது :மருத்துவமனை
அலுவலர்கள் பயிற்சிக்காக சென்னை சென்றால் நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிப்பதில் தொய்வுநிலை ஏற்படும். இதனால், மாவட்ட தலைமை மருத்துவமனையில் 10
பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எல்காட் நிறுவனத்தினர் சிறப்பு
பயிற்சி வழங்க உள்ளனர், என்றார்.