/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்கள் குமுறல்
/
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்கள் குமுறல்
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்கள் குமுறல்
இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்கள் குமுறல்
ADDED : ஆக 06, 2025 11:14 PM
ராமநாதபுரம்:ரேஷன் பொருட்களை வீடுதேடி சென்று கொடுக்கும் திட்டத்தில் உதவியாளர் இல்லை, வண்டி வாடகை குறித்தும் தெளிவாக கூறவில்லை. கூடுதல் பணிச்சுமையால் விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளதாக ரேஷன் கடை விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தினகரன், மாநிலச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கூறியது: 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று பொருட்கள் வழங்கும் திட்டம் ஆக.,15 முதல் அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
அதற்கு முன்பாக கடைகளில் உதவியாளர் நியமிக்க வேண்டும். வண்டி வாடகையும் வழங்க வேண்டும். எடையிட்டு வழங்குவதில் பிரச்னை உள்ளதால் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.
பொதுவினியோகத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கிடங்கில் சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடியும் அரசு கண்டுகொள்ளவில்லை. விளம்பரத்திற்காக மட்டுமே திட்டங்களை தமிழக அரசு அறிவிக்கிறது என்றனர்.