ADDED : செப் 25, 2026 03:39 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் சிவகுரு பிரபாகரனுக்கு வந்ததகவலின்அடிப்படையில் நேற்று முன்தினம் குடிமை பொருள் வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஆனந்த், பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் கோபி காரிக்கூட்டம் கிராமத்தில் ரேஷன் கடை அருகே தணிக்கை செய்தனர்.
அப்போது 74 மூடைகளை கொண்ட 3540 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காக மூடைகளாக கட்டி வெளியில் வைக்கப்பட்டிருந்தது. அது பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இக்கடத்தலில் ஈடுபட்டதாக காரிக்கூட்டம் ரேஷன் கடை விற்பனையாளர் சத்ய கவிதா 42, மீது குற்றப்புலனாய்வுத் துறை குடிமை பொருள் வழங்கல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கவிதாவை 'சஸ்பெண்ட்' செய்து ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு உத்தரவிட்டார்.
