/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை
ADDED : அக் 30, 2025 03:50 AM
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சியில் வெட்டன்மனை பகுதியில் இயங்கி வந்த ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்த நிலையில் இது குறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
இங்கு 300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக புதிய கட்டடம் ஏதும் கட்டப்படாமல் 2 கி.மீ., ல் உள்ள ஏர்வாடி நுழைவு வாயில் பகுதியில் தனியார் வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு நிர்வாகி முருகசக்தி கூறியதாவது: சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்த இடத்தில் மீண்டும் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தனியார் கட்டடத்தில் ரேஷன் கடை இடப்பற்றாக் குறையுடன் இயங்கி வருகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி ஏற்கனவே இருந்த அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன் என்றார்.

