/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் பணியாளர்கள் ராமநாதபுரத்தில் ஜூலை 7ல் காத்திருப்பு போராட்டம் செயற்குழு கூட்டத்தில் முடிவு

ADDED : ஜூலை 04, 2025 11:28 PM
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 7 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளியம்மன் கோயில் வளாகத்தில் அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
டி.என்.டி.எஸ்.சி., எடை தராசும், ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையத்தையும் இணைத்து சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும்.
விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு மீண்டும் நடைமுறைப்படுத்த வேணடும்.
இணையதள வசதியை மேம்படுத்த வேண்டும். ஐ.ஏ.எஸ்., தலைமையில் 9வது ஊதிய மாற்றம் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 7ல் தற்செயல் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் முடிவு செய்யப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.