தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரேஷன் பணியாளர்கள் ஜூலை 3ல் போராட்டம்

 ரேஷன் பணியாளர்கள் ஜூலை 3ல் போராட்டம்

 ரேஷன் பணியாளர்கள் ஜூலை 3ல் போராட்டம்


ADDED : ஜூன் 30, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: தாயுமானவர் திட்டத்தில் புதிதாக விதவைகள், ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. அதற்கான கட்டமைப்பை உருவாக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஜூலை 3ல் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தினகரன், செயலாளர் மாரிமுத்து ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது:

தாயுமானவர் திட்டத்தில் புதிதாக விதவைகள், ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இரண்டு, மூன்று நாட்கள் அவர் களது இல்லம் தேடி வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

வயோதிகர், மாற்று திறனாளிகள் இல்லம் தேடி பொருள்கள் வழங்குவதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அதற்கான வண்டி வாடகை, கூடுதல் பணியாளர்கள், தனி அலுவலர் கண்காணிப்பு போன்ற கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரக, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி, தற்காலிக எடையாளர் ஊதியம் நிர்ணயம் செய்து சுற்றிக்கை உடனடியாக வெளியிட வேண்டும். திட்டத்தை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடை முறைப்படுத்த வேண்டும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.

இறந்து போனவர் பெயர்களை வருவாய் துறையினரே விற்பனை முனைய பதிவு பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய வேண்டும். வெளிநாடு சென்றவர்களின் பெயரை பதிவுப்பட்டியலில் நீக்கம் செய்ய வேண்டும்.

விடுமுறை நாட்களில் இ-கேஒய்சி பதிவு செய்ய சொல்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 3ல் பணிகளை புறக்கணித்து மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us