UPDATED : நவ 19, 2026 06:10 PM
ADDED : நவ 19, 2026 06:10 PM
ராமநாதபுரம்: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மகளிர் சுய உதவிக்குழுவினரைத் தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வலியறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் நவ.,23ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தினகரன், செயலாளர் மாரியப்பன் கூறியதாவது:
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்களில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ஆட்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மெல்ல மெல்ல தனியார் வசம் கொண்டு செல்வற்கான முன்னோட்டமாக இது தெரிகிறது. இந்த தற்காலிக பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
கூட்டுறவுத் துறையில் பணியாளர் தேர்வு என்பது மாவட்ட ஆள் சேர்ப்பு மையம் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் ஜெயசந்திர ராஜா வழிகாட்டுதலின் படி நவ.,23 ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.––
