தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜூன் 24ல் ரேஷன் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

 ஜூன் 24ல் ரேஷன் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

 ஜூன் 24ல் ரேஷன் பணியாளர்கள் வேலைநிறுத்தம்


ADDED : ஜூன் 17, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: 'பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டல முறையில் வழங்கல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஜூன் 24ல் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக' மாநில துணைத்தலைவர் தினகரன், செயலாளர் மாரிமுத்து கூறினர்.

ராமநாதபுரத்தில் அவர்கள் கூறியதாவது:

பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, பொட்டல முறை, எடையாளர் நியமனம், கல்வி தகுதிக்கேற்ப விற்பனையாளர்களுக்கு இள நிலை உதவியாளர் ஊதியம், எடையாளருக்கு அலுவலக உதவியாளர் ஊதியம், ஓய்வூதியம், தாயுமானவர் திட்டத்தை தனி நபர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும், இ.பி.எப்., வழங்க வேண்டும், தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் தி.மு.க., ஆட்சியில் கண்டு கொள்ளவில்லை.

இதன் கோரிக்கைகளை முதல்வர் விஜய் நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் 24ல் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us