/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தினமும் ஒரு மணி நேரம் செய்தித்தாள் படியுங்கள்: மாஜி டி.ஜி.பி., அறிவுரை
/
தினமும் ஒரு மணி நேரம் செய்தித்தாள் படியுங்கள்: மாஜி டி.ஜி.பி., அறிவுரை
தினமும் ஒரு மணி நேரம் செய்தித்தாள் படியுங்கள்: மாஜி டி.ஜி.பி., அறிவுரை
தினமும் ஒரு மணி நேரம் செய்தித்தாள் படியுங்கள்: மாஜி டி.ஜி.பி., அறிவுரை
ADDED : ஆக 13, 2025 11:11 PM

ராமநாதபுரம்: மாணவர்கள் தினமும் ஒரு மணி நேரம் செய்தித்தாள் படித்தல், எழுதுதல், புத்தகம் வாசித்தல் பழக்கத்தை ஏற்படுத்தினால் உங்களின் கனவு நனவாக மாறும் என ஓய்வுபெற்ற தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தமிழ் கனவு கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடி சரியான விடையளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
வேலைவாய்ப்புக்கான கண்காட்சி நடந்தது.
ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசியதாவது:
தமிழ் கனவு நிகழ்ச்சியில் நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லுாரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும்.
எனவே கல்லுாரிகளில் தமிழர் மரபு நாகரீகம், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள், அவற்றை செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு வழங்கப்படுகிறது.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி குறித்த கையேடும், தமிழ் பெருமிதம் குறித்த கை யேடும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தலா ஒரு மணி நேரம் செய்தி தாள் படிப்பது, எழுதுதல், புத்தகம் வாசித்தல் என்ற மனநிலைக்கு மாறினால் உங்களிடமிருந்து இன்றைய கனவு நனவாக மாறும் நிலை உருவாகும் என்றார்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலு வலர் கோவிந்தராஜலு, ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கற்றனர்.

