ADDED : அக் 07, 2025 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைஷ்ணவ சபா சார்பில் விஷ்ணு சஹஸ்ரநாமம் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது.
43ம் ஆண்டு வைஷ்ணவ சபாவின் விழாவையொட்டி, இருநாட்கள் விழா நடந்தது. நேற்று முன்தினம் விஷ்ணு ஸஹஸ்ர நாம புத்தகம் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நேற்று காலை 9:00 மணி தொடங்கி மாலை 6:00 மணி வரை விஷ்ணு சஹஸ்ரநாமம் தொடர் பாராயணம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.