/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
/
சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஏப் 10, 2025 05:51 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் சார்பில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுரங்கள் வழங்கல் நடந்தது.
ராமநாதபுரம் சமரச தீர்வு மையம் சார்பில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிபதி மெஹபூப் அலிகான் துவக்கி வைத்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விரைவு மகிளா நீதிபதி கவிதா, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மோகன்ராம், சார்பு நீதிபதியான சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அகிலாதேவி, கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின்வெஸ்டா, மாஜிஸ்திரேட்கள் நிலவேஸ்வரன், பிரபாகரன், சட்டக்கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால், வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் அன்புசெழியன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சமரச தீர்வு மைய பணியாளர்கள் செய்திருந்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தில் சட்டக்கல்லுாரி மாணவர்கள் பதாகைககள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாடானை
நீதிமன்றத்தில் சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நீதிபதி மனிஷ்குமார் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: சமரச மையத்தில் வரக்கூடிய பிரச்னைக்கு இரு தரப்பினரையும் வைத்து சுமுகமாக பேசி தீர்வு காணப்படும். உங்களுடைய சம்மதத்துடன் அமைதியாக தீர்வு காணப்படும். இந்த மையத்தில் வைக்கப்படும் பிரச்னைகள் குறித்த ரகசியம் காக்கப்படும்.
மிக எளிய முறையில் பண விரயம் இல்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்வு காணப்படும் என்று பேசினார். நீதிபதி அன்டோனி ரிஷந்தேவ் மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் சமரச தீர்வு காண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

