/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை 'ருணவிமோசன' தீர்த்தம் புனரமைப்பு
/
நாளை 'ருணவிமோசன' தீர்த்தம் புனரமைப்பு
ADDED : ஜூலை 13, 2025 11:06 PM
ராமேஸ்வரம்: நாளை (ஜூலை 15ல்) ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் ருண விமோசன தீர்த்தத்தை புனரமைக்கப்பட உள்ளது.
குபேரர் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிட மகா விஷ்ணுவிடம் வேண்டினார். அப்போது மகாலட்சுமி குரல் அவரை ராமேஸ்வரம் அருகே உள்ள ருண விமோசன தீர்த்தத்தில் 48 நாட்கள் சிவபூஜை செய்து புனித நீராடினால் சாப விமோசனம் கிடைக்கும் என கூறினார்.
அதன்படி இந்த தீர்த்தத்தில் குபேரர் 48 நாட்கள் பூஜை செய்து புனித நீராடி இழந்ததை மீண்டும் பெற்றார்.
அதன்படி இத்தீர்த்தத்தில் நீராடி தரிசனம் செய்வோருக்கு கடன் தீர்ந்து செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
தங்கச்சிமடம் ஏகாந்த ராமர் கோயில் எதிரே உள்ள இத்தீர்த்தத்தை 5 ஆண்டுக்கு முன்பு விவேகானந்த கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் சுற்றுச் சுவர் அமைத்து புணரமைத்தனர்.
தற்போது தீர்த்தத்தில் செடிகள் வளர்ந்து உள்ளதால், நாளை பூஜை செய்து புனரமைப்பு பணி நடக்க உள்ளது என பசுமை ராமேஸ்வரம் அமைப்பின் நிர்வாகி சரஸ்வதியம்மா தெரிவித்தார்.