/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் மீட்பு
/
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் மீட்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் மீட்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை 5வது தளத்தில் கிடந்த உடல் மீட்பு
ADDED : நவ 09, 2024 02:11 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமவனையில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், ஐந்தாவது தளத்தில் உள்ள பால்கனி பகுதியில் நிர்வாணமாக, அழுகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தின் ஐந்து தளங்களில், ஐந்தாவது தளத்தில் நிர்வாணமாக ஆண் உடல் ஒன்று நேற்று கிடந்ததை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி, 54, உடல் என்பது தெரிய வந்தது.
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், காயமடைந்ததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இரண்டாவது தளத்தில் சிகிச்சையில் இருந்தவர், ஒரு வாரத்திற்கு முன் காணாமல் போனார். இந்நிலையில் ஐந்தாவது தளத்தில், அழுகிய நிலையில் நிர்வாணமாக அவர் சடலமாகக் கிடந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இது இரண்டாவது சம்பவம்.
ஏற்கனவே ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்து, வாலிபர் தற்கொலை செய்த நிலையில், மருத்துவமனை கண்காணிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.