/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷனில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு: கடைக்காரர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
/
ரேஷனில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு: கடைக்காரர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
ரேஷனில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு: கடைக்காரர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
ரேஷனில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு: கடைக்காரர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
ADDED : ஏப் 27, 2024 04:00 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடைகளுக்குரிய வழக்கமான அளவை காட்டிலும் மிகக்குறைவாக 700 ரேஷன் கார்டுகளுக்கு 57 லிட்டர் தான் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க முடியாததால் விற்பனையாளர்களுடன் வாக்குவாதம் செய்து ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பிச் செல்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என விற்பனையாளர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 186 ரேஷன் கார்டுகளில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 738 அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷனில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் இறுதிவரை வழங்கப்படுகிறது.
இவர்களில் காஸ் சிலிண்டர் இல்லாதவர்கள், ஒரு சிலிண்டர் வைத்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 3 லிட்டர், 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.ஆனால் கடந்த சில மாதங்களாக கடைகளுக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க முடியாமல் விற்பனையாளர்கள் திணறுகின்றனர். கடைகளில் விற்பனையாளர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் மாநில துணைத் தலைவர் தினகரன், மாநில செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கூறியதாவது:
பொதுவாக 700 கார்டுகளுக்கு 2000 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். குறிப்பாக இந்த மாதம் 700 கார்டுகளுக்கு 57 லிட்டர் தான் வழங்கியுள்ளனர். சில கடைகளுக்கு முழுமையாக வழங்கவில்லை. மத்திய அரசு குறைந்த அளவே வழங்குவதாக மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.
விபரம் தெரியாத மக்கள் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். கடைகளுக்குரிய மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். இல்லை ஏன்றால் முழுமையாக நிறுத்திவிட வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வுகாண உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

