/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
/
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
வைகை அணையில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு
ADDED : அக் 13, 2024 07:24 AM
ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 2030 கனஅடியிலிருந்து 1780 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
பெரியாறு பாசனப்பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு செப்., 15 முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3 முதல் வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவில் வினாடிக்கு 250 கன அடி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
நீர் வளத்துறையினர் கூறியதாவது:
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கான சூழல் தொடர்வதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறையும். இதனை கருத்தில் கொண்டு அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 1780 கன அடி வீதம் பாசனத்திற்கும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேறுகிறது. இவ்வாறு கூறினர்.