/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றில் தண்ணீரை தடுக்கும் நாணல்கள்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
வைகை ஆற்றில் தண்ணீரை தடுக்கும் நாணல்கள்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
வைகை ஆற்றில் தண்ணீரை தடுக்கும் நாணல்கள்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
வைகை ஆற்றில் தண்ணீரை தடுக்கும் நாணல்கள்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 18, 2024 07:04 AM

பரமக்குடி : -பரமக்குடி வைகை ஆற்று பகுதிகளில் தண்ணீரை தடுக்கும் நாணல் புற்கள், தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்துள்ளதை, சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பரமக்குடி பகுதி மக்களுக்கு ஊற்றுநீர் ஆதாரமாக வைகை ஆறு மட்டுமே இருக்கிறது. ஆற்றில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் கலக்கும் நிலையில், தேவையற்ற செடி, கொடிகளுக்கு பஞ்சம் இல்லாமல் நாணல் புற்கள் நிறைய வளர்ந்துள்ளன. இதனால் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு புகலிடமாக ஆறு மாறுகிறது.
தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில், தண்ணீர் கண்களுக்கு புலப்படாத வகையில் சென்று மறைகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது அழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்கு ஆற்றை குறிப்பிட்ட பகுதியில் துாய்மை செய்யும் பணிகள் நடக்கிறது.
இச்சூழலில் ஆடு, மாடு என மேய்ச்சல் நிலமாக ஆறு மாறி உள்ளதால், பல்வேறு மரங்களும் வளர கால்நடைகளின் எச்சங்கள் ஏதுவாக இருக்கிறது.
இதனால் தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் சென்றாலும், கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகளால் ஆற்றின் ஊற்று நீருக்கு சிக்கல் உண்டாகிறது.
எனவே ஒட்டுமொத்த வைகை ஆற்று பகுதியில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்ற நீர் வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.