/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப்பள்ளிகளின் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சி
/
அரசுப்பள்ளிகளின் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சி
அரசுப்பள்ளிகளின் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சி
அரசுப்பள்ளிகளின் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சி
ADDED : ஜூலை 26, 2025 11:33 PM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்க சிறப்பு புத்துணர்ச்சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் ஐந்து கணித பட்டதாரி ஆசிரியர்கள் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர்.
இதில் மெல்ல கற்கும் மாணவர்களை தோல்வியிலிருந்து வெற்றி பெறச்செய்ய எளிய கணக்குகள் எவை, எவை என்றும், குறைந்தது 35 மதிப்பெண்கள் பெறுவது எப்படி, நன்றாக கணிதம் படிக்கும் மாணவர்களை நுாற்றுக்கு நுாறு பெற வைப்பது எப்படி என்ற வகையிலும் பயிற்சி அளித்தனர்.